சொல் பொருள்
1. (வி) 1. விரும்பு, 2. வேட்கைகொள், காமவிருப்பம்கொள்,
2. (பெ) 1. மசக்கை நோய், 2. காம வேட்கை,
வயிறு வாய்த்தல் (கருக் கொள்ளல்) வயா எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
வயிறு வாய்த்தல் (கருக் கொள்ளல்) வயா எனப்படும். வயா > வயவு; புறா > புறவு ஆவது போல. மயக்கம் வாந்தி, புளிவேட்கை என்பவை வயாக்குறிகளாகும் கருக் கொள்ளுதல் ‘வயா’ எனக் கருங்குளம் வட்டாரத்தில் வழங்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, have sexual desire, morning sickness, languor during pregnancy, sexual desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476 காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின் ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை தீம் கண் கரும்பின் கழை வாங்கும் – கலி 40/26-28 “சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண்யானை, தான் விரும்பும் பெண்யானை கொண்ட முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழையை வளைத்து முறிக்கும் நீர் உறை கோழி நீல சேவல் கூர் உகிர் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்று நின் மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51 நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை கூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே! புளியங்காய்க்கு ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய அகன்ற மார்பானது இவளின் வேட்கை நோய்க்கு வயாஅம் என்பது வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை என்பார் ஔவை.சு.து. தன் ஐங். உரை விளக்கத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்