சொல் பொருள்
வயிற்றைக்கட்டுதல் – உணவைக் குறைத்தல்
சொல் பொருள் விளக்கம்
வயிற்றுப் பாடு பெரிது. மூவேளையுண்டாலும் இடையிடை வேண்டியும் கிடப்பது. ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதவர் நிலைமை என்னாம்? அத்தகையவர்க்கும் வேறு வேறு கட்டாயச் செலவுகள் இருந்தால் என்ன செய்வர்? அந்நிலையில் வயிற்றொடு போராடி, பசியைக் கட்டாயத்தால் கட்டிப்போட்டே காலந்தள்ள நேரும். இதுவே வயிற்றைக் கட்டுதலாம். வயிற்றில் ஈரத்துணியைப் போடுதல் என்பதும் இத்தகு வழக்கே. வாயைக் கட்டுதற்கும் இதற்கும் சிறிய வேறுபாடு உண்டு. வாயைக் கட்டுதல் பார்க்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்