சொல் பொருள்
(வினா) வரவா?
சொல் பொருள் விளக்கம்
வரவா?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shall I come?
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/2-5 தளிர்கள் சேர்ந்த குளிர்ச்சியுள்ள தழையுடையை அணிந்து உனது தந்தையின் கிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா? பறித்த சுனைக் குவளை மலரைச் சூடி, நாம் முன்பு சேர்ந்திருந்த நறிய குளிர்ந்த மலைச்சாரலில் ஆடுவதற்கு வரவா?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்