சொல் பொருள்
(பெ.அ) 1. வறிய, வற்றிய, 2. வெறுமையான,
சொல் பொருள் விளக்கம்
வறிய, வற்றிய,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dried up, empty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 11,12 (உவாவிற்கு)எட்டாம் நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி, உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும் வறு நீர் நெய்தல் போல – நற் 183/10 நீர் வற்றிய குளத்து நெய்தல் மலர் போல பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை – புறம் 164/3,4 பால் இல்லாததால் தோலாகிப் போன தன்மையுடன் சுருங்கி துளை தூர்ந்த பொல்லாத வற்றிய முலையை புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6 பொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி நெல்லி கோடை உதிர்த்த குவிகண் பசும் காய் அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப வறு நிலத்து உதிரும் அத்தம் – அகம் 315/10,13 நெல்லியின் மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள் நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிக்குக் காசுகளை ஒப்ப வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்