Skip to content

சொல் பொருள்

(பெ.அ) பார்க்க : வறு

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : வறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dried up, empty, bare, empty receptacle, bare hand
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வறும் – வறு – வறிய – வற்றிப்போன, dried up

உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/17-19

நீர் உண்டற்கு விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானையானது
தனது கையால் தோய்த்தும் நீர் இன்மையால் பெருமூச்செறியும் வறிய சுனையினையுடைய

வறும் – வறு – வறிய – வெறுமையான – empty, bare

உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 267

நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;

வறும் கூடு – empty receptacle (container for grains)

விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 218

விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க,

வறும் கை – bare hand

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *