சொல் பொருள்
1. (வி) 1. சூழ், சுற்று, 2. பின்னு, 3. சிக்கலுண்டாக்கு, 4. பின்னிக்கிட, 5. சுழற்று,
2. (பெ.அ) வலது,
சொல் பொருள் விளக்கம்
சூழ், சுற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
encircle, surround, spin, as a spider its thread; plait; weave, tangle, complicate, entangle, entwine, brandish, swing around, right side
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/9,10 மீன் சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய கொடிபோன்ற ஒழுங்கு வயலிடத்து மருதினது வளைந்த கிளையைச் சூழ்ந்திருக்கும் அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5 காய்ந்த தலையினையுடைய ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் கூடானது மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/10,11 மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம், அழிவற்ற வேதங்கள் சொன்னபடி முறைப்படி கூறாது, முன்னும் பின்னுமாக மாறி மாறி கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/28 “கொம்புகளைச் சுற்றிக் குடல்கள் பின்னிக்கிடந்த காளையின் முன் சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப – நற் 149/1-4 சிலரும், பலருமாகக் கூடி, கடைக்கண்ணால் அக்கம்பக்கம் பார்த்து, மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற, சிறிய கோலை ஏந்தி அது சுழலும்படி வீசிஅடிப்பவும் அன்னை வருத்த – வலந்தனள் – சுழற்றினளாகி – பின்னத்தூரார் உரை புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி – அகம் 215/4 அழகிய மாண்புற்ற வேலை வலப்பக்கம் ஏந்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்