வலசை என்பதன் பொருள்புலம் பெயர்தல்.
1. சொல் பொருள்
புலம் பெயர்தல்
பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் புலம் பெயருவதைக் குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
3. சொல் பொருள் விளக்கம்
ஒரு மொத்தமாகக் குடியேறிப் போதலை வலசை போதல் என்பது பொது வழக்கு. பறவைகள் நூற்றுக்கணக்கில் வண்ண மாலை போல் பறந்து போதலை வலசைபோதல் என்பர். வலசை என்னும் பெயருடைய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாகக் குடியேறியுள்ள ஊர்களாகும். வலசைவருதல் என்பதற்குக் குடியேறுதல் என்னும் பொருள் செட்டி நாட்டு வழக்கில் உள்ளது
4. பயன்பாடு
பட்டாம் பூச்சிகள் வலசைசெல்வதில் தாமதம்
வலசைப்பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் வலசைபோகும் காலம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்