சொல் பொருள்
(பெ) வல்லவகை, மிகவும் கடினமான வழி,
சொல் பொருள் விளக்கம்
வல்லவகை, மிகவும் கடினமான வழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
very difficult manner
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்த நீள் இடை அவனொடு போகிய முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380 கடினமான பாதையைக் கொண்ட நீண்ட வெளியில் அவனோடு போய்விட்ட முத்தைப் போன்ற அழகிய வெண்மையான பற்களையும், முகிழ்க்கின்ற புன்னகையையும் கொண்ட அந்தப் பேதையின் தாய் என்ற பெயரையே மிகவும் கடினமானவகையால் பெற்றேன் நான்; அவளை அவனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்தவர்கள் அவளின் தோழிமாரே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்