சொல் பொருள்
(பெ) குதிரைக்கழுத்தில் கட்டும் வடம்,
சொல் பொருள் விளக்கம்
குதிரைக்கழுத்தில் கட்டும் வடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Halter of a horse;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குதிரை வழங்கி வருவல் அறிந்தேன் குதிரை தான் பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் – கலி 96/6-10 குதிரை ஏற்றம் பயின்றுவிட்டு வருகிறேன்!” “தெரியும் எனக்கு, நீ ஏறியது குதிரைதான்! ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும், அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும், நீல மணிகள் கோத்த கடிகையென்னும் கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்