சொல் பொருள்
(வி.அ) 1. விரைந்து சென்று, 2. சிரமப்பட்டு,
சொல் பொருள் விளக்கம்
விரைந்து சென்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
going quickly
with great effort
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே செல்க என விடுநள்-மன்-கொல்லோ – நற் 68/5-7 பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்; இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால் செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ? – வல்லிதின் – விரைந்து சென்று – பின்னத்தூரார் உரை, ச.வே.சு உரை, கு,வெ.பா உரை, இராமையா பிள்ளை உரை – வல்லிதின் – வற்புறுத்தி – ஔவை.சு.து உரை – வல்லிதின் – வலியச் சென்று – புலியூர்க் கேசிகன் உரை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/4,5 சிறிய மோதிரத்தை இறுக்க அணிந்திருந்த மெல்லிய விரல்கள் சிவந்துபோகும்படி, வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி – வல்லிதின் – வல்லபடி, பல்வேறு வகையாக – ஔவை.சு.து.உரை, விளக்கம் – வல்லிதின் – மிகவும் சிரமப்பட்டு – புலியூர்க் கேசிகன் உரை – வல்லிதின் – உண்ணும் வகையில் – ச.வே.சு உரை, கு,வெ.பா உரை – வல்லிதின் – திறம்பட – இராமையா பிள்ளை உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்