சொல் பொருள்
1. (மு.வி.மு) (நீ) ஆற்றலுடையவள்(ன்),
2. (வி.அ) விரைவாக,
சொல் பொருள் விளக்கம்
(நீ) ஆற்றலுடையவள்(ன்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you are) capable
quickly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நும்மொடு வருவல் என்றி எம்மொடு பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை முனாஅது வேனில் இற்றி தோயா நெடு வீழ் வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/6-12 உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்; எம்முடன் – பெரும் பெயர் கொண்ட தந்தையின் நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையில் உன் தாயோடு மிகவும் அதிகமான அன்புச் சூழலில் வளர்ந்த இளம்பெண்ணே! – முன்பு வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம் அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் – வருவதற்குத் திறன் உள்ளவளாயிருத்தல் இயலுமோ உனக்கு. கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை புல்லென் வறு மனை நோக்கி மெல்ல வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/5-8 மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில் பொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி மெல்ல வருந்தியிருப்பாள் திருத்தமான அணிகலன்களை அணிந்திருக்கும் நம் தலைவி, எனவே, விரைந்து செலுத்துவாயாக தேரினை, செல்வாயாக!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்