Skip to content

சொல் பொருள்

(வி) 1. சூழ்ந்திரு, 2. கல,

சொல் பொருள் விளக்கம்

சூழ்ந்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

surround, mix, as hot water with cold; dilute

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/27,28

நிலையான குளிர்ச்சியையுடைய இளவெயில் தன்னைச் சூழ்ந்து நிற்க, உள்ளே இருள் வளர்ந்திருப்பதைப் போல்,
பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும்
நிலையை

வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறு முறை வளாவ – புறம் 292/1,2

வேந்தனுக்காக எடுத்துக்கொடுத்த இனிய குளிர்ந்த நறவை
தனக்குரிய முறைப்படியே யாங்கள் வேறு பொருள் கலந்து கொடுத்தோமாக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *