Skip to content

சொல் பொருள்

(பெ) வட்டில் வகை, 

சொல் பொருள் விளக்கம்

வட்டில் வகை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a dish for use in eating or drinking

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்த வள்ளத்தில் கள்ளை ஊற்றிக் குடிப்பர்

வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய – பெரும் 338,339

கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து

இந்த வள்ளத்தில் பாலை ஊற்றிக் குடிப்பர்.

பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5

பால் பெய்யப்பெற்ற கிண்ணம் நிறைந்ததனைப் பற்றிக்கொண்டு

சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/3,4

சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி, கோபித்துக்கொண்டிருக்கும் மென்மையான சிறிய கிளியை உண்ணச்செய்தவளின் முகத்தைப் போல

செல்வர் மனைகளில் இந்த வள்ளம் வெள்ளி, பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.

கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல – கலி 73/3,4

கண் கூசும்படியாக ஒளி விடும் வெண்மையான வெள்ளிக் கிண்ணத்தில் குளிர்ச்சியான நறுமணம் கமழும் மதுவைக் குடிக்கும் மங்கையின் முகத்தைப் போல,

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1

பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க,

பயன்படாத நேரத்தில் வள்ளத்தை உறையினில் இட்டு வைப்பர்.

முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/74–76

முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல் கரிய உறைக்குள் போட்டுவைத்திருந்த வெள்ளி வட்டிலை வெளியில் எடுத்து, சூட்டை உண்டாக்கும் கள்ளை வார்த்து, பாம்பு பற்றிய முழுநிலவைப் போலத் தம் உள்ளங்கையில் தாங்கி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *