சொல் பொருள்
வள்ளல் – கருமி
சொல் பொருள் விளக்கம்
இல்லை என்னாமல் எல்லை இன்றி வழங்குவது வள்ளன்மை எனப்படும். நீயே என் கொடைப் பொருள் என ஒரு கோடு போட்டால் அக்கோட்டைக் கடந்து வரமாட்டானாம் பாரி. “வாரேன் என்னான் அவர் வரையன்னே” என்பது புறப்பாடல். அத்தகைய வள்ளன்மையைக் குறியாமல் அதற்கு எதிரிடைப் பொருளையும் வள்ளல் என்பது தருதல் வழக்கில் உண்டு. நீ பெரிய வள்ளல்; தெரியாதா? என்பதில் கருமி என்பது வள்ளற் பொருளாம், “உன் வள்ளல் ஊரறியுமே” என்பது எள்ளலென எளிதில் புரியுமே. “நீ பிறந்ததால்தானே பாரி செத்தான்” என்பது இனிக் கொடையால் புகழ்பெற முடியாதென இறந்தான் என்பதைக் குறித்துப் புகழ்வது போலப் பழிப்பதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்