சொல் பொருள்
(பெ) வழுதுணங்காய், கத்தரிக்காய்,
சொல் பொருள் விளக்கம்
வழுதுணங்காய், கத்தரிக்காய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brinjal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17 பெண் யானை மிதித்தமையால் ஆகிய வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைமையால் வழுதுணைத் தழும்பன் என்னும் சிறந்த பெயரினையுடையான். இவனது ஊர் ஊணூர் எனப்படும். இந்த ஊருக்கு அப்பால் பாண்டியரின் மருங்கூர் இருந்தது என்கிறது இப்பாடல். இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/9,10 என்ற பாடல் அடிகளும் இதனை உறுதிப்படுத்தும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்