சொல் பொருள்
வாட்டம் – வளமான உயரம்.
சாட்டம் – வளமான கனம்.
சொல் பொருள் விளக்கம்
வாட்டம்-வளம், வாளிப்பு எனவும் வழங்கும். வளமான உடல், வாளிப்பான தோற்றம் என்பர்.
சட்டம் என்பதும் சட்டகம் என்பதும் உடல். ‘எற்புச் சட்டகம்’ என்பதும் உண்டு. இவண் சாட்டம் உடற்கட்டினைக் குறித்து நின்றது. ஒழுங்கமைந்த நெடுமை வாட்டமும், ஒழுங்கமைந்த கனம் சாட்டமுமாம். ‘நீர்வாட்டம்’ பார்த்தல் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்