சொல் பொருள்
(பெ) 1. வாசல், 2. வழி
சொல் பொருள் விளக்கம்
வாசல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gate, doorway
source
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356 வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாசல், வாயிலொடு புழை அமைத்து ஞாயில்தொறும் புதை நிறீஇ – பட் 287,288 பெரிய வாசல்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி, கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய கேளிர் போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 72-75 வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே, ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி, (தான்)உபசரிப்பதற்கு வழியாகிய இரப்பினையே (யான்) எப்பொழுதும் விரும்புமாறு (முகமன்)பொழிந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்