சொல் பொருள்
வாயும் வயிறும் – பிள்ளைகள்
வாய் – பாலுண்ணும் குழந்தை
வயிறு – வயிற்றிலுள்ள குழந்தை
சொல் பொருள் விளக்கம்
வாயும் வயிறும் – “அவள் இப்பொழுது வாயும் வயிறுமாக இருக்கிறாள்’ என்றால் வாய்க்கு எடுத்து ஊட்டும் பிள்ளையொன்றும் வயிற்றுப்பிள்ளை யொன்றுமாக இருக்கிறாள் என்பது விளக்கமாம். அதனால், ‘அவளால் வேறு வேலை என்ன செய்ய முடியும்’ என்பது பரிவு கூர்தலாம். சில குடும்பங்களில் படுத்தும் பாட்டைப் பார்த்து ‘வாயும் வயிறுமாக இருப்பவளுக்கு இனியது செய்ய வில்லையானாலும் இடைஞ்சலாவது செய்யாமல் இருக்க வேண்டாமா?” என்பது பட்டறிவு வாய்ந்த மூதாட்டியர் உரையாம்.
கைக் குழந்தையுடன் இருக்கும் ஒருத்தி வயிறு வாய்த்து இருந்தால் அவள் வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்பர். அவள்மேல் இரக்கம் காட்டி அவளுக்கு வேண்டும் உதவிகளும் செய்வர். வாய்க் குழந்தைகளுக்கு உணவூட்டுவாளும் அவள்; வயிற்றுக் குழந்தைக்கு உணவாவாளும் அவள்; இரு குழந்தை களுக்கும் உடலில் ஊட்டம் வேண்டுமே ‘ஊட்டுவதற்கு’ என்னும் பரிவு தந்த பரிசு ‘வாயும் வயிறுமாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்