சொல் பொருள்
வாய் திறத்தல் – பேசல்
சொல் பொருள் விளக்கம்
“என்னதான் சொன்னாலும் வாயைத் திறந்தால் தானே” என்பது பேசினால் தானே என்னும் பொருளதாம். ‘வாயைத் திற என மருந்து ஊட்டவோ உணவு ஊட்டவோ கட்டளையிடுவதல்லாமல் பேசக்கட்டளையிடுவதாய் அமைந்தது ‘வாயைத்திற’ என்பதாம். காவல் நிலையங்களில் உண்மையை வருவிக்க என்னென்னவோ பாடுபடுத்துவர். ஆயினும் சிலர் வாயைத் திறப்பதே இல்லை. ‘வாயைத் திறக்க மறுக்கிறான்; உயிரைக் கூட விட்டு விடுவான்; ஒரு சொல்லை விடமாட்டான் போலிருக்கிறது” என்பதில் வாய்திறத்தல் என்பது பேசுதல் பொருளில் வருதல் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்