சொல் பொருள்
(பெ) சமைப்போன்,
சொல் பொருள் விளக்கம்
சமைப்போன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cook
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஞ்சுவந்த போர்க்களத்தான் ஆண் தலை அணங்கு அடுப்பின் வய வேந்தர் ஒண் குருதி சின தீயின் பெயர்பு பொங்க தெறல் அரும் கடும் துப்பின் விறல் விளங்கிய விழு சூர்ப்பின் தொடி தோள் கை துடுப்பு ஆக ஆடுற்ற ஊன் சோறு நெறி அறிந்த கடி வாலுவன் அடி ஒதுங்கி பின் பெயரா படையோர்க்கு முருகு அயர – மது 28-38 அச்சந்தரும் போர்க்களத்தின்கண் ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில் வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை 30 வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க, வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும், வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்) (இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத வீரர்க்குக் களவேள்விசெய்யும்படி, கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/4-9 அம்புகளாகிய அழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளால் செய்யப்பட்ட அடுப்பிலே கூவிளங்கட்டையாகிய விறகிட்டு எரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க தலையிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னி மரத்தின் கொம்பை அதில் செருகப்பட்ட காம்பாகவும் ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவி சமைத்த மாக்களும் உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைக்க பேய்மடையனான வாலுவன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் இரண்டு இடங்களில் வருகின்றது. இந்த இரண்டு இடங்களுமே மன்னனின் போர்வெற்றியைக் கொண்டாட பேய்கள் எடுக்கும் களவேள்வியைப் பற்றிய குறிப்புக்கள் கொண்டவை. இந்த இரண்டு குறிப்புகளுமே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் போர்வெற்றியைப் புலவர் மாங்குடிக் கிழார் எனப்படும் மாங்குடி மருதனார் பாடியவை என்பது ஆய்விற்குரியது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்