Skip to content

சொல் பொருள்

(வி) 1. வசி, 2. உயிரோடிரு, 3. இரு

சொல் பொருள் விளக்கம்

வசி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

live, dwell, live, be alive, exist, be

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9

வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126

உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்

வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2

உயிரோடிருக்கும் நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை;

அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304

(ஆற்று மணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556

வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே

உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/6,7

மையுண்ட கண்களின்
மணிகளில் இருக்கும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *