சொல் பொருள்
விட்டக்குறை – முன்னைப் பிறவியில் செய்யாமல் விட்ட குறைவினை.
தொட்டக்குறை- இப்பிறவியில் எடுத்து முடிக்காமல் விட்ட குறைவினை.
சொல் பொருள் விளக்கம்
ஒருவன் பிறவியைத் தீர்மானிப்பது ‘விட்டக் குறை தொட்டக்குறை’ என்பது இந்திய நாட்டுக் கொள்கை. குறை நீக்கமே வீடுபேறு என்று சொல்லப்படும். சிலர் இளமையிலேயே பெருநிலைப் பேற்றாளராகத் திகழ்வர். அன்னவரை “விட்டகுறை தொட்ட குறையால் வந்தவர். குறை முடிந்து நிறைவாகிவிட்ட பெருநிலை இது” எனப் பாராட்டுவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்