சொல் பொருள்
1. (வி) பார்க்க :வினவு
2. (பெ) கேள்வி,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க :வினவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
question
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ – கலி 68/16,17 சேரிதோறும் சென்று நீ இருக்கும் வீட்டைக் கேட்டறிந்துகொள்பவனாய்த் தேரோடு சுற்றித்திரியும் பாகனையே பழிப்போமா? ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் – குறி 2-5 செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி) அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும், (கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும், விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/49 காமவயப்பட்டிருப்போர் கேள்விகேட்க, அந்தக் கேள்விகளுக்கு விடையிறுப்போரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்