சொல் பொருள்
(வி.எ) 1. விரவிய – கலந்த, 2. விரவிய – சுற்றிக்கொண்ட, கட்டிப்போட்ட,
சொல் பொருள் விளக்கம்
விரவிய – கலந்த
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coil up, as rope,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாள்மீன் விராய கோள்_மீன் போல – பட் 68 (அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல, இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10 இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து, வெருவார் இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/23,24 அஞ்சாத வீரர் கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரி பொருந்திய குடரை ஒருங்குசேர்த்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்