சொல் பொருள்
(பெ) எரிக்கப்பயன்படும் மரக்கட்டை,
சொல் பொருள் விளக்கம்
எரிக்கப்பயன்படும் மரக்கட்டை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
firewood
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156 மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு களிறு தரு விறகின் வேட்கும் ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 498-500 சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும், ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன் நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446 (உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்