சொல் பொருள்
விற்சுளி (விச்சுளி) – மீன் குத்தி அல்லது மீன் கொத்தி,
அம்பு, விரைந்து பாயும் பாய்ச்சல்
சொல் பொருள் விளக்கம்
வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விற்சுளி என்பது. அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை மீன் குத்தி அல்லது மீன் கொத்தி. சுள் > சுளி = விரைவு. விரைந்து பாயும் பாய்ச்சல் விற்சுளி எனக் கழையாட்டில் ஓர் ஆட்டமாக நிகழும். விண்வெளி ஓடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்வெளி ஓடத்தில் தாவிப் பற்றுவது போன்ற தாவுதல் அது. முந்நீர் விழா. விச்சுளிப்பாய்ச்சல்
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்