சொல் பொருள்
(வி) மேன்மையடை, நன்மையடை,
சொல் பொருள் விளக்கம்
மேன்மையடை, நன்மையடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
attain benefit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் இளையோள் இறந்த அனைத்தற்கு ————– —————— ——————– —————- கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு காவல் செறிய மாட்டி ஆய் தொடி எழில் மா மேனி மகளிர் விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/10 ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன; எதனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் இவள் என்று கேட்பாயாயின், தழை அணிந்து அசைவாடும் அல்குலையுடையவளாய், தெருவில் இளையோள் நடந்து சென்ற அந்த ஒரு நிகழ்ச்சிக்கே, ——————- —————– ——————————– ———– கல்லென்ற ஓசையுடையதாயிருந்தது ஊர் முழுதும்; அதனால் வீட்டுக்கதவுகளை இறுக்கப் பூட்டி, அழகிய வளையணிந்த எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர் நன்மையடைந்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்