சொல் பொருள்
வெடிப்பு – எழுச்சி
சொல் பொருள் விளக்கம்
வெடி, வெடித்தல், என்பவற்றில் வெடிப்பு என்பது தோன்றிற்றாம். ‘அவன் வெடிப்பான பிள்ளை’ ‘அந்த மாடு நல்ல வெடிப்பு’ என்றால் சுறுசுறுப்பு எழுச்சி விரைப்பு உடையது என்பதே பொருளாம். வெடி, வெடித்து எழும்புவது காரணமாகப் பெற்ற பெயர். நிலம் வெடிப்பு, பித்த வெடிப்பு, பக்கு வெடிப்பு என்பனவெல்லாம் எழும்புதலால் பெற்ற பெயரே.வெடி செய்தல் பெருந்தொழிலாகத் திகழ்கிறது. அவ்வெடியால் விளையாட்டும் வினையாதலும் கண்கூடு. வெடிப்பு எழுச்சி ஆக்கத்திற்கு இருந்தால் நல்லதே. அழிவுக்குத் தலைப் படும் போது அரற்ற வேண்டியுள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்