1. சொல் பொருள்
ஒரு சங்ககால ஊர்,
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால ஊர்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
an ancient city
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் – அகம் 211/13,14 கல்லாத எழினியின் பல்லைப் பறித்துவந்து பதித்த வன்மை பொருந்திய கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு எழினி என்பான் வாராமையால், சினங்கொண்ட சோழமன்னன் மத்தி என்னும் படைத்தலைவனை ஏவ, அவன் சென்று அவ் வெழினியைப் போரிலே அகப்படுத்த், அவன் பல்லைப் பறித்துவந்து வெண்மணி என்னும் ஊரினது வாயிற் கதவிலே பதித்தனன். மத்தி என்பான் கழார் என்னும் ஊருக்கு உரியவன். வெண்ணிவாயில் போல வெண்மணிவாயில் என்பதும் ஊரின் பெயர் என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்