சொல் பொருள்
வருத்தமுறு, பெருமூச்சுவிடு, வெம்மையுறு
சொல் பொருள் விளக்கம்
வருத்தமுறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be distressed, heave a sigh, be heated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/5-8 நிணத்தை விரும்பும் கிழட்டு நரி புதிய ஊனை நிறைய உண்டு, நீர் வேட்கையால் வருத்தமுற்று கானல்நீர் தெரியும் வறண்ட புலத்தில் தேடியலைந்து, நீரை விரும்பி, பிணத்தை மூடியுள்ள கற்குவியலில் நிழலான ஒதுங்குமிடத்தைப் பெறாமல் கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும் மட கண் மரையா நோக்கி வெய்துற்று புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/1-4 கண்ணிபோல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை, சிவந்த தண்டையுடைய அறுகம்புல்லின் நீண்ட கதிரைக் கொறித்துமேயும் மடப்பமுடைய கண்களையுடைய மரையா என்னும் காட்டுப்பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு புல்லிய அடியினைக் கொண்ட உகாய் மரத்தின் வரிவரியான நிழலில் தங்கும் பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்துற்று வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/6,7 காலத்தில் பெய்யும் மழை காக்காமல் போனதினால் வெப்பம் மிகுந்து நலமற்றுப் போனது காலத்தின் பண்பு என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்