சொல் பொருள்
வெருகினுடைய
சொல் பொருள் விளக்கம்
வெருகினுடைய
வெருகு + பல் = வெருக்குப்பல், வெருகு +அடி = வெருக்கடி, வெருகு+விடை = வெருக்கு விடை
மாடு + கொம்பு = மாட்டுக்கொம்பு; ஆடு + வால் = ஆட்டு வால், போல புணர்ச்சி விதியில் வெருகு,
வெருக்கு ஆனது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wild cat’s
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/3 காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/6 பூனையின் அடியினை யொத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் – புறம் 324/1-3 காட்டுப்பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும் பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின் தம்மில் ஒருவரையொருவர் விரும்பிநட்புக்கொள்ளும் சிறுவர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்