சொல் பொருள்
வெப்பம், விரும்பப்படுவோர், நட்புடையோர்
சொல் பொருள் விளக்கம்
வெப்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heat, Those who are liked, friends
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21 போர்வெம்மையின் மிகுதி பெருக, பகைவரை, மிளகினை இடிக்கும் உலக்கையைப்போல் அவரின் பெரிய தலைகளைத் தோமரத்தால் இடித்து அழிக்க, – நன்மை நன்னர் என வருதல் போல, வெம்மை வெவ்வர் என்று வந்தது என்பார் பழையவுரைகாரர். வெம்மை என்னும் பண்பிற்கு வெவ்வர் என்பதும் ஒரு வாய்பாடு என்பர். போர்க்குரிய மறத்தீயின் வெம்மை மிக என்பது அவர் கருத்தாதலை அறிக – ஔவை.சு.து.விளக்கம். வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21 நட்பரசருடைய ஆக்கம் பெருகவும், பகையரசருடைய பெரிய தலைகளை உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு போல இடித்து – ஔவை.சு.து.உரை – வேண்டற்பொருட்டாக வெம்மை என்னும் பண்படியாகப் பிறந்த இவ் வெவ்வர் என்னும் பெயர், வெய்யர் என வரற்பாலது, எதுகை நோக்கி வெவ்வரென வந்தது என்று கோடல் சீரிது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்