1. சொல் பொருள் விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Neem, margosa, Azadirachta indica
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8 வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டு கிள்ளை வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2 கிளியானது தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம் வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் - ஐங் 30/1 வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே - திருப்:755/4 வேப்பம்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - வஞ்சி:29/186
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்