சொல் பொருள்
ஏறடு, மேல்வை
சொல் பொருள் விளக்கம்
ஏறடு, மேல்வை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
place over
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/19-21 ஓயாமல் அடுத்தடுத்து ‘அப்பா, அப்பா’ என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன் வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்? – மாண வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் – வேய் போலும் மெல்லிய தோள்களிலே மாட்சிமைப்பட ஏறட்டுக்கொள்ளுங் கூற்றிலே ஏறட்டுக்கொண்ட அளவிலும் – நச்.உரை – என் தோள்மீது ஏற்றிவைத்திருக்கும்போதும் – மா.இராச. உரை – மகிழ்ச்சியால் மெல்லிய தோளில் தூக்கிவைத்தாலும் – ச.வே.சு.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்