சொல் பொருள்
ஒரு சங்ககால ஊர்,
சொல் பொருள் விளக்கம்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைப்பாடிப் பரிசில் பெற ஒரு பாணன்
செல்வதாகக் கூறும் வழியில் உள்ள ஓர் ஊர். சென்னைக்குத் தெற்கே உள்ள பகுதி இடைக்கழிநாடு.
ஓய்மாநாடு எனப்படுவது திண்டிவனப்பகுதி. இவற்றுக்கு இடைப்பட்ட வெளியில் உப்புவேலூர் என்று ஓர் ஊர்
இன்றும் உண்டு. இங்கு கூறப்படும் வேலூர் அது ஆகலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in Sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 173 வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்