சொல் பொருள்
வெந்துபோவது
சொல் பொருள் விளக்கம்
வெந்துபோவது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get burnt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவது அளித்து இ உலகு – கலி 142/51-54 காம நோய் தீயாக என்னைச் சுட்டாலும், கண்ணீரை என் கண்களுக்குள் சுழலச் செய்து என் அழகிய கண்ணிமைகளுக்குள் அடக்கிக்கொள்ளுவேன், அவ்வாறு மறைத்துக்கொள்வதால், கண்களில் தோன்றும் காமத்தால் உண்டான சூடான நீரை நிலத்தில் சிந்தினால், அழியும்படி வெந்துபோகும் இரங்கத்தக்க இந்த உலகம்; ஒழிந்து யான் ஊதுலை குருகின் உள்ளுயிர்த்து அசைஇ வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேஎன் கனவ – அகம் 55/6-9 யான் அவளைப் பிரிந்திருந்து உலைக்கண் ஊதும் துருத்தி போல வெய்துயிர்த்து உள் மெலிந்து தீயில் வெந்துபோவது போலும் வெவ்விய நெஞ்சமொடு கண் துயிலேனாய் வாய் வெருவிப் புலம்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்