சொல் பொருள்
(வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை,
சொல் பொருள் விளக்கம்
நுண்ணியதாகு, சுருங்கு, குறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become minute, shrink, be reduced in size, quantity etc.,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 551,552 பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும், ‘இல்லை’ என்று விரித்த கையினையும் உடையோராய் நல்லகம் நயந்து, தான் உயங்கிச் சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8 நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்