சொல் பொருள்
(வி.மு) நீங்குகிறீர்,
சொல் பொருள் விளக்கம்
நீங்குகிறீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you are) leaving – plural
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று இவள் அவலம் – நற் 37/7,8 அன்பு இல்லாதவராய்ப் பிரிந்துசென்றீராயின், என் பாரமாக ஆவது அன்று இவளது அவலம்; செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என மெல்லென கிளந்தனம் ஆக வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 121-123 செல்வனே, (யாங்கள்)செல்வேம் – எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு’ என்று மெதுவாகச் சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம் போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்