Skip to content

சொல் பொருள்

1. (வி) தோண்டு,  2. (பெ) 1. பள்ளம், 2. அகழி, கோட்டை மதிலைச் சூழ்ந்த கிடங்கு,

அகழ் : அகழப்படுதலின் அகழ் என்றது ஆகுபெயர். (பெரும்பாணாற்றுப்படை 107-8.)

சொல் பொருள் விளக்கம்

தோண்டு,

அகழப்படுதலின் அகழென்றது ஆகுபெயர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dig up, excavate, ditch, moat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 271

மலைகளைத் தோண்டி மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1

உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு

வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும்பாணாற்றுப்படை  107,108

மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214

அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்

குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18

அரணை அடுத்த ஆழ்ந்த அகழியையும் நீண்ட மதிலையும் உடைய ஊர்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *