சொல் பொருள்
அக்கம் – தன் வீடும் தானிருக்கும் இடமும்.
பக்கம் – தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தான் இருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும்.
சொல் பொருள் விளக்கம்
ஒரு குடிவழியர் அல்லது தாயாதியர் இருக்கும் வீடு வளைவு, வளசல் எனப் பெறும். அவ்வீடுகள் ஒரு காலத்தில் ஓருடைமையாய் இருந்து பின்னர்ப் பலபாகமாய் அமைதல் வழக்கு. அவற்றுள் தன் வீடும் இடமும் அக்கமும், அதற்கு அருகிலுள்ளது பக்கமும் ஆயது. அக்கம்-அகம்; பக்கம்-பகம்;(பிரிவு)
“பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே” என்பது பழமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்