சொல் பொருள்
(பெ) தளர்வு
பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.
சொல் பொருள் விளக்கம்
தளர்வு
அசைவு : அசைவு என்பது பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.
(தொல். பொருள். 253. பேரா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Weariness, faintness, exhaustion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251 குவளைமலர்கள் பூத்த அழகிய பசிய சுனையில் தளர்வு நீங்கப் பருகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்