சொல் பொருள்
அச்சு – அச்சடிச் சீலை (சேலை) என்பது, சுங்கடிச் சீலை. ஓரம் சாரம் வெட்டி ஒழுங்குற்றதாய் நிலத்தைப் பண்படுத்துதலை அச்சுத்திரட்டல் என்பது உழவர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
வண்டி அச்சினையோ, அச்சிடுவதையோ குறியாத அச்சு என ஒன்று பொதுமக்கள் வழக்கில் உண்டு. அச்சடிச் சீலை (சேலை) என்பது, சுங்கடிச் சீலை. நெற்பயிர் நடுகைக்கு முன் சமனிலையாய் – ஓரம் சாரம் வெட்டி ஒழுங்குற்றதாய் நிலத்தைப் பண்படுத்துதலை அச்சுத்திரட்டல் என்பது உழவர் வழக்கு. அச்சு என்பது வார்ப்படக் காசு என்னும் பொருளில் கல்வெட்டு உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்