சொல் பொருள்
அஞ்சடித்தல் – தொழில் படுத்து விடுதல்
சொல் பொருள் விளக்கம்
“அவர் கடை அஞ்சடிக்கிறது” என்றால், “ஈயோட்டு கிறார்” என்பது போன்ற வழக்காகும் : கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள். “தொழில் சீராக இல்லை அஞ்சடித்து விட்டது” என்பதும் கேட்கக் கூடியது. அஞ்சு என்பது ‘ஐந்து’ என்னும் பொருளது. இங்கு ஐந்து, மெய் வாய் கண் மூக்கு செவியாகிய ஐந்து உறுப்புகளையுடைய உடலைக் குறித்து நிற்கிறது. அடித்துப் போட்ட உடல் அசையாமல் கிடப்பது போலக் கடை வணிகமும், தொழில் இயக்கமும் படுத்து விட்டன என்பது விளக்கப் பொருளாம். சுறுசுறுப்பு இல்லாதவனைப் பார்த்தும் ‘என்ன அஞ்சடித்துப்போய் இருக்கிறாய்’ என்பதும் உண்டு. இது இப்பொருளை மேலும் தெளிவாக்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்