சொல் பொருள்
மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல்.
சொல் பொருள் விளக்கம்
மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். (திருக். 130. பரி.)
குறள் 130
அடக்கமுடைமை
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செல்வி-மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை; அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து-அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று.
விளக்கம்:
(அடங்குதல்-மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி-தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி, முகங்களின் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்