சொல் பொருள்
தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல்
சொல் பொருள் விளக்கம்
அடம்பிடித்தல் என்பது சொன்னதைக் கேளாமல், தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல் ஆகும். கலங்களில் பிடிக்கும் கரி அழுக்கு ஆகியவை அகலாமல் பற்றிக்கொள்ளுவதை அட்டுப் பிடித்தல் என்பர். அட்டுப் பிடித்தல் போல் தன் எண்ணத்தை விடாது பற்றுதல் அடம் ஆகும். இது நெல்லை, முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்