சொல் பொருள்
(பெ) 1. கொல்லுதல், 2. வலிமை, 3. போரிடுதல், 4. வெற்றி, 5. சோறு சமைத்தல்,
சொல் பொருள் விளக்கம்
1. கொல்லுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
killing, strength, being engaged in war, victory, cooking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடல் படை அடல் கொண்டி – புறம் 382/1 கடற்படைகொண்டு பகைவரைக் கொல்லுதலால் கொண்ட பெரும்பொருள் போருள், அடல் மா மேல் ஆற்றுவேன் – கலி 141/9 போரில் வலிமையுள்ள குதிரையில் மேலிருந்து போரிடுவேன் வானவரம்பன் அடல் முனை கலங்கிய – அகம் 45/17 வானவரம்பனது போர் முனையில் கலங்கிய அடல் அரும் துப்பின் – புறம் 335/1 வெல்லுதற்கரிய வலிமையுடைய அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4 சோறு சமைப்பதில் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்திவைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்