சொல் பொருள்
அடியோலை- முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை.
அச்சோலை – மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை.
சொல் பொருள் விளக்கம்
அடிமனை, அடிப்பத்திரம் என்பவற்றில் உள்ள அடி மூலமாதல் தெளிவிக்கும். மூலத்தில் உள்ளது உள்ளபடி, படியெடுப்பது அச்சோலையாம். “மூட்சியில் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை, மாட்சியிற் காட்ட வைத்தேன்” (பெரிய, தடுத்.56) என வருவதில் சுட்டும் படியோலை அச்சோலையாம். அச்சடிச் சீலை, அச்சுவெல்லம், வார்ப்பட அச்சு என்பவனவற்றைக் கொண்டு ‘அச்சு’படியாதல் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்