சொல் பொருள்
அடுக்கு – ஐந்து
சொல் பொருள் விளக்கம்
அடுக்குப் பாறை, அடுக்குப்பானை, அடுக்கு மொழி, அடுக்கு மல்லிகை என்பவற்றிலுள்ள அடுக்கு என்பது அடுக்கு தலைக் குறித்தது. எண்ணைக் குறித்தது இல்லை. ஆனால், வாழையிலையை ஒன்றனுள் ஒன்றாக அடுக்கி வைப்பது வழக்கம். அவ்வடுக்கு ஒன்றில் ஐந்து இலைகள் எண்ணி வைக்கப்படும். அடுக்குச் சட்டி என்பது ஒன்றனுள் ஒன்று அடங்கும் ஐந்து சட்டி களையுடையதாம். ஆதலால் அடுக்கு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறித்தது. கை, பூட்டு என்பவை காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்