சொல் பொருள்
அடுப்பு – அடுப்பு வேலை
துடுப்பு – அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை.
சொல் பொருள் விளக்கம்
அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலையறிந்து, அதில் மாவைப் போடுதலும், போடப்பட்ட மாவு கட்டிப் பட்டுப் போகாவண்ணம் கிண்டுதலும், தீயின் அளவினைத் தேவைக்குத் தகக் கூட்டிக் குறைத்துக் கொள்ளுதலுமாகிய பல திறத்தொரு பணிக்கிடையே அப்பணி செய்வாரை எவரேனும் கூப்பிட்டால் ‘அடுப்பும் துடுப்பு’மாக இருக்கிறேன் என்பார். உடனே வர முடியாது என்பது மறுமொழியாம். இதனை விடைவகை எட்டனுள் உற்றதுரைத்தலோடு சார்த்தலாம். அல்லது ‘பிறிது மொழிதல் விடை’ யென ஒன்பதாய் ஆக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்