அடும்பு என்பது அடப்பங்கொடி
1. சொல் பொருள்
(பெ) அடம்பு, ஒருவகைக் கொடி, அடப்பங்கொடி, ஆட்டுக்கால் அடம்பு, கடலாரைக் கொடி;
2. சொல் பொருள் விளக்கம்
இது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்
- இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போல இருக்கும்
- இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்
இதன் இலைகளை சங்க இலக்கியங்களில், மானடியன்ன கவட்டிலை அடும்பு என்றும், சித்தர் இலக்கியங்களில் ஆட்டுக்கால்அடும்பு என்றும் கூறுகிறார்கள்.
- வறள்அடும்பு உருத்திரங்கண்ணனார்
- கரைஅமல்அடும்பு நல்லந்துவனார்
- கவட்டிலைஅடும்பு பெருங்கண்ணனார்
- பொம்மல் அடும்பு நல்வெள்ளையார்
- கவட்டிலைஅடும்பு நம்பி குட்டுவனார்
- ஆய் மலர்அடும்பு அம்மூவனார்.
- மாக்கொடிஅடும்பு நம்பி குட்டுவன்
- மணற்கொடிஅடும்பு உலோச்சனார்
- ஆய்பூஅடும்பு நல்லந்துவனார்
- வறள்அடும்பு முடத்தாமக் கண்ணியார்
- அடைகரைதாழ்அடும்பு பாலைக் கெளதமனார்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Ipomoea pes-caprae, Hareleaf, Ipomaea biloba, Beach Morning Glory,
இதில் pes-caprae- என்பது விலங்கினங்களின் குளம்பு என பொருட்படக் கூறப்பட்டுள்ளது
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/1,2
மானின் அடியைப் போன்ற கவர்த்த இலைகளைக் கொண்ட
(குதிரை)மாலையில் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவைக் கோதி
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/8,9
ஒள்ளிய பலவாய மலர்களையுடைய கவடுபட்ட இலைகளையுடைய அடும்பினது
சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை நின் தேர்ச்சக்கரம் அறுத்துவர
இது நீர்நிலைகளை ஒட்டி வளர்வது
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2 அடும்பு இவர் மணல் கோடு ஊர – குறு 248/5 அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7 அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் – கலி 132/16 அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9 வறள் அடும்பின் இவர் பகன்றை - பொரு 195 வறள் அடும்பின் மலர் மலைந்தும் - பட் 65 மா கொடி அடும்பின் மா இதழ் அலரி - நற் 145/2 பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை - நற் 272/3 மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்/தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி - குறு 243/1,2 அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் - குறு 401/1 ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் - கலி 144/30 ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்/செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப - அகம் 80/8,9 அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை - குறி 87 குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் - நற் 254/2 அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் - நற் 338/2
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை - குறு 248/5 அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி - குறு 349/1 தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல - பதி 30/6 அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய - பதி 51/7 கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு - கலி 127/21 அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் - கலி 132/16 அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி - அகம் 160/3 அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அகம் 320/9
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ - நாலடி:11 7/2
அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் - ஐந்70:62/1
படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம் - திணை150:51/2
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே - பழ:194/3
அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே - பழ:202/3
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர் - கைந்:53/1
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் - புகார்:7/67
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் - தேவா-அப்:1032/3
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் - தேவா-அப்:1905/1
அட்ட மா மலர் சூடி அடும்பொடு
வட்ட புன் சடை மா மறைக்காடரோ - தேவா-அப்:1157/1,2
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய - தேவா-சுந்:734/2
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் - யுத்3:27 143/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்